நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
கிருஷ்ணகிரி : நிலத்தை அளந்து கொடுக்க, 6,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர், வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் முருகன்,56; விவசாயி. இவர் தன் காலி வீட்டுமனையை அளந்து, தனி பட்டா வழங்க கடந்த மாதம் 8ல், ஆன்லைனில் விண்ணப்பித்தார். இது குறித்து குருபரப்பள்ளி வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், சர்வேயர் வளையாபதி ஆகியோரை கடந்த, 4ல், சந்தித்து பேசினார்.
அப்போது வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், முருகனிடம், 6,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே, தானும், சர்வேயர் வளையாபதியும் சேர்ந்து நிலத்தை அளந்து கொடுப்போம் என தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவப்பட்ட, 6,000 ரூபாயை முருகனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த பணத்தை, வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், சர்வேயர் வளையாபதி ஆகியோரிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (1)
Senthamizhsudar - Chennai,இந்தியா
07 நவ,2025 - 21:44 Report Abuse
மாவட்டத்தை தவறாக ஆட்சி செய்யும் ஆட்சியரையும் கைது செப்ய வேண்டும் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement