கார் மோதி முதியவர் பலி
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டாக்டர் சுப்ராயன் தெரு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம், 67; இவர், அவரது இரு மகன்களது மளிகை கடையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, மல்லசமுத்திரம் அம்பேத்கர் தெரு விநாயகர் கோவில் அருகில், சேலம்-திருச்செங்கோடு நெடுஞ்சா-லையை கடக்க முயன்றபோது, ஆட்டையாம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த, 'டாடா இண்டிகா' கார் மோதி-யதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை, 6:30 மணிக்கு உயிரிழந்தார். சதாசி-வத்தின் மனைவி தனபாக்கியம், 57, அளித்த புகார்படி, மல்லச-முத்திரம் போலீசார் காரை ஓட்டி வந்த ஆட்டையாம்பட்டியை சேர்ந்த மெடிக்கல் உரிமையாளர் வெங்கடாசலம் மீது வழக்குப்ப-திந்து விசாரித்து வருகின்றனர். சதாசிவத்திற்கு கார்த்திகேயன், தனபால் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
மேலும்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்