ஓட்டுச்சாவடி முகவர்களுடன் அ.தி.மு.க., ஆலோசனை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, ஊஞ்சப்பாளையத்தில், அ.தி.மு.க., பூத் ஏஜன்ட்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பொன் சரஸ்வதி தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட தொகுதி பொறுப்பாளர் பிரபு பேசுகையில், ''ஓட்டுச்சா-வடி முகவர்கள் எந்த வாக்காளர்களும் விடுபடாமல் இருக்க கவ-னமுடன் செயல்பட வேண்டும்,'' என்றார். முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ''எஸ்.ஐ.ஆர்., பணி, அடுத்த மாதம், 4 வரை, ஒரு மாதத்திற்கு நடக்கிறது. இறந்தவர்கள், வெளியூருக்கு சென்றவர்கள் குறித்து நாம் பலமுறை எழுதி கொடுத்தும் நீக்கப்ப-டாமல் இருந்தனர். தற்போது, தேர்தல் ஆணையமே, அந்த பணியை செய்து கொண்டிருக்கிறது. திருட்டு ஓட்டு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், தேர்தல் ஆணையம் வாக்-காளர் திருத்தம் பணியை செய்கிறது.தி.மு.க.,வினர் திருட்டு ஓட்டு போட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு வாய்ப்பு இல்லாமல் தேர்தல் ஆணையம் செய்வதால் தான், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். சிறப்பு வாக்காளர் திருத்தம் நடைபெற வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் நீதிமன்றத்திற்கு செல்வோம்,'' என்றார்.
மேலும்
-
சுதந்திர போராட்ட வீரர், மனைவியுடன் கொலை; வ.தேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை
-
தேசிய கால்நடை கணக்கெடுப்பு விவரம் அடுத்தாண்டு மார்ச் வெளியிட திட்டம்
-
தொகுதிகளில் குறையும் வாக்காளர்கள் பூத் வாரியாக ஆய்வு செய்யும் அதிகாரிகள்
-
போலி தங்க காசு கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி
-
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
-
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை