டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ்: கோகோ காப் ஏமாற்றம்

ரியாத்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஏமாற்றிய அமெரிக்காவின் கோகோ காப் தோல்வியடைந்து வெளியேறினார்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், டபிள்யு.டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில், உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், 'ஸ்டெபி கிராப்', 'செரினா வில்லியம்ஸ்' என இரு பிரிவுகளாக 'ரவுண்டு ராபின்' முறையில் லீக் சுற்றில் விளையாடினர். இதில் 'செரினா' பிரிவில் அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), எலினா ரிபாகினா (கஜகஸ்தான்) அரையிறுதிக்கு முன்னேறினர்.

'ஸ்டெபி கிராப்' பிரிவில் அரினா சபலென்கா (பெலாரஸ்), 'நடப்பு சாம்பியன்' கோகோ காப் (அமெரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), ஜாஸ்மின் பாவோலினி (இத்தாலி) இடம் பிடித்திருந்தனர். கடைசி லீக் போட்டியில் சபலென்கா, கோகோ காப் மோதினர். இதில் கோகோ காப், 6-7, 2-6 என தோல்வியடைந்தது வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெசிகா பெகுலா 6-2, 6-3 என பாவோலினியை வென்றார். முடிவில், இப்பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த சபலென்கா, பெகுலா அரையிறுதிக்கு முன்னேறினர்.
அரையிறுதியில் சபலென்கா - அனிசிமோவா, பெகுலா - ரிபாகினா மோதுகின்றனர்.

Advertisement