மத்திய அரசு திட்ட விழாவில் பிரதமர் படத்தை தவிர்ப்பதாக பா.ஜ., குற்றச்சாட்டு
ராசிபுரம்: மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்துடன், தமிழக அரசும் இணைந்து, நாமக்கல்லில், நேற்று சிறுதானிய உணவு திருவிழாவை நடத்தின. மத்திய அரசு சார்பில், இத்திட்டதிற்கு நிதி வழங்கப்படுகிறது. நேற்று நடந்த விழா மேடை பின்புறம் திட்டம் குறித்த பேனர் வைத்திருந்தனர்.
அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் படம் இடம் பெற்றிருந்-தது. மத்திய அரசு சின்னம் மட்டும் வைத்திருந்தனர். பிரதம் மோடி படம் வைக்கப்படவில்லை.இதுகுறித்து, மத்திய அரசு நலத்திட்டப்பிரிவின் மாநில துணை அமைப்பாளர் லோகேந்திரன் கூறியதாவது: மத்திய அரசின் நிதியில் தொடங்கப்படும் திட்டங்களில் கூட பிரதமர் படத்-தையோ சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் படத்தையோ, மாவட்ட நிர்வாகம் வேண்டும் என்றே தவிர்த்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் படத்தையும், மத்திய ஊட்டச்சத்து துறை அமைச்சர் பிரலஹாத் ஜோசி படத்தையும் வைத்திருக்க வேண்டும்.
ஆனால், முன்னாள் முதல்வர் படத்தை வைத்துள்ள மாவட்ட நிர்வாகம், பிரதமர் படத்தையும், மத்திய அமைச்சர் படத்தையும் வைக்கவில்லை. இதுகுறித்து புகாரளிக்கப்படும். அது மட்டு-மின்றி நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் மத்திய அரசு திட்-டங்கள் அனைத்திலும், இதையேதான் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
-
வாக்காளர் படிவங்கள் குறித்து கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் புகார்
-
கர்ப்பிணி போல் நடித்து பணம் வசூலிக்கும் பெண்கள் கும்பல்
-
கவுண்டம்பாளையத்துக்கு இடம் பெயர்ந்தோருக்கு இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
-
தி.மு.க.,வில் ஐக்கியமா? வதந்தி என்கிறார் பன்னீர் செல்வம்
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த இருவர் சிக்கினர்; துப்பாக்கிகள் பறிமுதல்