காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு

பவானி: சித்தோடு அருகே அம்மணி அம்மாள் தோட்ட பகுதியில், காவிரி ஆற்றங்கரையோரத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, அந்த வழியாக சென்ற மக்கள் சித்தோடு போலீசா-ருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாந்திபேதி - மர்ம காய்ச்சல்மலை கிராமத்தில் அவதி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில், 60க்கும் மேற்-பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கூட்டார் தொட்டியில், 15 பேர், ஒசப்பாளையத்தில், 10 பேர் நேற்று முன்தினம் முதல் வாந்-தி-பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement