கவுண்டம்பாளையத்துக்கு இடம் பெயர்ந்தோருக்கு இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
கோவை: கோவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடந்து வருகிறது. ரேஸ்கோர்ஸ் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்த பல குடும்பத்தினர், கவுண்டம்பாளையம் குடியிருப்புக்கு நிரந்தரமாக இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன. இருப்பினும், அவர்களுக்கு ரேஸ்கோர்ஸில் இன்னமும் ஓட்டுரிமை இருக்கிறது.
நிரந்தரமாக இடப்பெயர்ச்சியான அக்குடும்பத்தினருக்கு, தற்போது தவறுதலாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு விட்டது. இல்லாத வீட்டு முகவரியில் வாக்காளர்கள் வசிப்பதாக எப்படி ஓட்டுரிமை வழங்க முடியும் என்கிற கேள்வி எழுந்தது. இது தேர்தல் ஆணைய விதி முறைக்கு மாறானது.
இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன்குமார், குரூப் குரூப்பாக இடம் பெயர்ந்தவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என, ஆய்வு செய்து வருகிறார்.
முத்தண்ணன் குளக் கரைக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு எத்தனை குடும்பத்தினர் வசித்தனர்; இப்போது எங்கு வசிக்கிறார்கள் என விசாரித்தார்.
பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் இடம் பெயர்ந்திருப்பதால், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரில் சென்று விசாரித்து, பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்தினார்.
நேற்று கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரித்தார். மொத்தம், 1,848 குடும்பத்தினர் வசிப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இவர்களில், 112 பெயர்களே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கூறியதால், கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். சராசரியாக 7,500 வாக்காளர்கள் அங்கு வசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதனால், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு வாக்காளர்களை மாற்றுவதற்கு தனி முகாம், ரேஸ்கோர்ஸில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்களிடம் பிரத்யேகமாக படிவங்கள் பெற்று, பட்டியலில் பெயர் சேர்க்க அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் குமரேசன் ஆகியோரது தலைமையில், இன்று (9ம் தேதி) கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, குடியிருப்பு வாசிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இந்தியா தேடும் குற்றவாளிகள் 2 பேர் அமெரிக்காவில் கைது: நாடு கடத்த ஏற்பாடு
-
ஆப்ரிக்க நாடுகளில் ஜனாதிபதி சுற்றுப்பயணம்: அங்கோலாவில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
'சிக்கன் நெக்' பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா!
-
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
-
நவம்பர் 11ல் பிரதமர் மோடி பூடான் சுற்றுப்பயணம்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்