ஆதார் ஹவுசிங் பைனான்ஸை வாங்குகிறது பிளாக்ஸ்டோன்
புதுடில்லி: ஆதார் ஹவுசிங் பைனான்ஸின் 80.15 சதவீத பங்குகளை வாங்குவதற்கு பிளாக்ஸ்டோன் நிறுவனத்துக்கு, இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன், தன் துணை நிறுவனமான பி.சி.பி., ஆசியா வாயிலாக 80.15 சதவீத ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டத்துக்கு அனுமதி கேட்டு, போட்டி ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
இந்தியாவில் வீட்டுக்கடன், சொத்துக்கடன் வணிகத்தில் ஈடுபட்டு உள்ள ஆதார் ஹவுசிங் பைனான்ஸ், ஆயுள், பொது காப்பீடு வினியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறது.
சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் ஒப்புதலுக்கு பின், பங்குதாரர்களிடமிருந்து ஓபன் ஆபர் முறையில், நேரடியாக பங்குகளை வாங்க பிளாக்ஸ்டோன் திட்டமிட்டு உள்ளது. தற்போது ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் பங்கு ஒன்றின் விலை, 492.20 ரூபாயாக உள்ளது.
மேலும்
-
வெங்கமேடு ரயில்வே மேம்பாலத்துக்கு படிக்கட்டுகள் கட்ட மக்கள் வலியுறுத்தல்
-
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூவர் படுகாயம்
-
சாலையில் நிறுத்தும் ஆட்டோக்களால் நெரிசலில் தவிக்கும் பக்தர்கள்
-
முத்தனுார் வருண கணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
-
குளித்தலை சட்டசபை தொகுதி பா.ஜ., பூத் கமிட்டி ஆலோசனை
-
பொது// 3 வீடுகளில் புகுந்து திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது