பைக்கில் இருந்து தவறி விழுந்த மூவர் படுகாயம்
குளித்தலை: பல்சர் பைக்கில் இருந்து தவறி விழுந்து, மூன்று வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி பஞ்., சுக்காம்பட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 48. விவசாய கூலி தொழிலாளி. கடந்த 5 மதியம் 1:45 மணியளவில் இவரது மகன் மாணிக்கராஜ், 23, அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ், 21, முருகதாஸ், 21, ஆகியோர் மாணிக்கராஜ் என்பவருக்கு சொந்தமான பல்சர் பைக்கில், மாணிக்கராஜ் ஓட்ட இருவரும் பின்னால் அமர்ந்து சொந்த வேலையாக கரட்டுப்பட்டி சென்றனர்.பின்னர் மூவரும் வீட்டுக்கு பைக்கில், தரகம்பட்டி - பஞ்சப்-பட்டி நெடுஞ்சாலை குமிழி பஸ் ஸ்டாப் அருகே வரும்போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தனர். இதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்-தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூவரும், திருச்சி அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுப்பிரமணி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை
-
'மாஜி' காதலியுடனான படங்கள் பரப்பியவருக்கு அடி, உதை
-
லோக் ஆயுக்தா நீதிபதிகள் சொத்து விபரம் தாக்கல் செய்ய காங்., - எம்.எல்.சி., 'கிடுக்கி'
-
குட்டை பாவாடை அணிந்திருந்த பெண்ணுக்கு பலாத்கார மிரட்டல்