3 வீடுகளில் புகுந்து திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது
வண்ணாரப்பேட்டை: வீட்டு வசதி வாரியத்தில் உள்ள மூன்று வீடுகளில் திருடிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
பழைய வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகரன், 42. இவர், கடந்த 6ம் தேதி, வீட்டை பூட்டி அருகில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தில், இரண்டு மொபைல் போன்கள், 12,300 ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், அதே குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன், 25 என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதேபோல, அருகில் வசிக்கும் சுந்தர், 36, தமிழரசி, 38 ஆகியோரது வீட்டிலும் திருடியது தெரியவந்தது.
அவரை நேற்று கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு மொபைல் போன், டேப்லட், மூன்று பட்டுப்புடவைகளை மீட்டனர்.
மேலும்
-
ஆர்.டி.இ., கட்டணம் இழுத்தடிப்பால் 7800 பள்ளிகள் போராட்ட அறிவிப்பு: நவ.12ல் கறுப்பு கொடியேற்ற முடிவு
-
பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்
-
40வது நாளை எட்டியது நிதி முடக்கம்: விதியை மாற்ற அமெரிக்க அதிபர் திட்டம்
-
2 யானைகள் மோதலில் தந்தத்தை இழந்த 'பீமா'
-
கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
-
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,300 சர்க்கரை ஆலைகளுக்கு எச்சரிக்கை