மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கல்
கள்ளக்குறிச்சி: களமருதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மாற்றுத்திறளிகளுக்கான சிறப்பு முகாமில், 34 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
திருநாவலுார் ஒன்றியம் களமருதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் விக்னேஷ், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் தேமாங்கனி, காது மூக்கு தொண்டை டாக்டர் மனோஜ் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 161 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
அதில் தகுதிவாய்ந்த, 34 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 4 மாற்றுத்திறனாளிகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். 64 பேர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
மேலும்
-
'இஸ்ரோ' விஞ்ஞானி ஆவேன் 'மாணவ விஞ்ஞானி' ரிஷிதாவின் லட்சியம்
-
நானும் கோலங்களும்... பாலச்சந்தர் பரவசம்
-
இந்தியாவை சுற்றிய டிரைசைக்கிள் நண்பர்கள்
-
அமெரிக்கா அரசு நிர்வாகம் முடக்கத்தால் கடும் பாதிப்பு: சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்கிறார் டிரம்ப்
-
ரோட்டில் சென்ற வேன் தீ பற்றியது அதிர்ஷ்டவசமாக 10 பேர் தப்பினர்
-
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை அமைப்பாளர் சிவா அழைப்பு