கோவாவில் 'அயர்ன் மேன் 70.3' போட்டி அசத்திய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா
கோவாவில் நடந்த, 'அயர்ன் மேன்' போட்டியில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையும், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும் அசத்தினர்.
கோவாவில் கடந்த பல ஆண்டுகளாக அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் பந்தயம் நடந்து வருகிறது. இது, நீச்சல் (1.9 கி.மீ.,) சைக்கிள் ஓட்டுதல் (90 கி.மீ., மற்றும் ஓட்டப்போட்டி (21.1 கி.மீ.,) ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான சர்வேதேச விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்தப் போட்டி பல சர்வதேச வீரர்கள் உட்பட சுற்றுலா பயணியரையும் ஈர்த்துள்ளது.
இந்தாண்டு நடந்த போட்டியில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவும் பங்கேற்றனர்.
அண்ணாமலை, சைக்கிள் போட்டியில் பந்தய துாரத்தை, 3:14:33 மணி நேரத்தில் கடந்தார். இதுபோன்று 1.9 கி.மீ., துார நீச்சல், 21.1 கி.மீ., துார ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து முடித்தார். மூன்று போட்டிகளையும், 8 மணி நேரம் 13 நிமிடங்களில் கடந்தார்.
அதுபோன்று, இரண்டாவது முறையாக பங்கேற்ற பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சைக்கிள் போட்டியில், பந்தய துாரத்தை, 3:47 மணி நேரத்தில் கடந்தார். இதுபோன்று 1.19 கி.மீ., நீச்சல், 21.1 கி.மீ., ஓட்டத்தையும் கடந்தார். மூன்று போட்டிகளையும் சேர்த்து, 7 மணி நேரம் 49 நிமிடங்களில் கடந்தார்.
இப்போட்டி குறித்து அண்ணாமலை கூறுகையில், ''இப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் விடாமுயற்சியையும், ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துவதில் சாம்பியன்களாவர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 'பிட் இந்தியா'வுக்கான தொலைநோக்கு பார்வை, எதார்த்தத்தில் இருந்து தொலைவில் இல்லை. இதில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்று, தங்கள் அன்றாட வாழ்வில் உடல் தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,'' என்றார்.
தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ''கோவாவில் நடக்கும் இந்தியாவின் அயர்ன் மேன் போட்டி, 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர்களை ஈர்த்து உள்ளது. இப்போட்டி, உடல், மன வலியையின் சோதனையாகும். இதற்காக கடந்த சில மாதங்களாக, கடுமையான பயிற்சியை மேற்கொண்டேன். இந்த சவாலை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
- நமது நிருபர் -:
இந்தியாவின் எதிர்காலத்தூண்கள்..... தலைவர்கள்மேலும்
-
எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
-
என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
-
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
-
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா