வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கம் கிராம், 11,270 ரூபாய்க்கும், சவரன், 90,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் (நவ.,08) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வை கண்டு இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்க ஆபரணங்கள் உபயோகம் இல்லாமல் ஓன்று வங்கி லாக்கரில் உள்ளது அல்லது வீட்டில் பீரோவில் உள்ளது, உபயோகமற்ற பொருளுக்கு விலை நிர்ணயம் உலக அளவில்.மேலும்
-
திமுகவை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
-
என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
-
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
-
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா