பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம்
டெஹ்ரான்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் விருப்பம் தெரிவித்து உ ள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், அதன் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே, டி.டி.பி., எனப்படும் தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக மோதல் உள்ளது.
இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளிப்பதாக ஆப்கன் மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இதை, ஆப்கானில் ஆளும் தலிபான் பயங்கரவாத அமைப்பு மறுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றன.
போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக மூன்று கட்டங்களாக பேச்சு நடந்தும், எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில், இந்த பதற்றங்களை தீர்க்கவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் சக முஸ்லிம் நாடு மற்றும் அண்டை நாடு என்கிற விதத்தில் பாகிஸ்தானுக்கு உதவ விரும்புவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் உடன், அரக்சி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரெண்டு தேவபந்த் இஸ்லாமிய நாடுகளும் இணைந்து ஒரே நாடாக மாறினால் இந்தியாவுக்கு நல்லது ,அப்படி இணைந்தால் ஒட்டு காலகட்டத்தில் பாரசீகமும் இணையும்
பாக்., - ஆப்கன் மோதலை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய ஈரான் விரும்புகிறதாம். அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. எங்களுடைய மோடி அவர்களின் படைத்தளபதிகளான, மாவீரன் ஜெய் சங்கரும், எங்கள் நாட்டின் ஜேம்ஸ்பாண்டான அஜித் தோவாலும் அந்த விஷ்யத்தை கவனித்துக்கொள்வார்கள். உங்களுக்கு ஏன் வீண் சிரமம்.
அதெல்லாம் நடக்காத காரியம். இது போருக்கான நேரமில்லைந்னுட்டு ரெண்டு நாடுகளுக்கும்.போயிட்டு வந்துருங்க.மேலும்
-
எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
-
என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
-
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
-
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா