தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை
சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில், தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, மதுரை விமான நிலையம், திருமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் தலா, 3; கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, மதுரை நகரம், மதுரை வடக்கு, மேலுார், தல்லாகுளம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதிகளில், தலா, 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் வடமாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி திருத்தம் நிலவுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங் களில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில், சில இடங்களில், வரும், 12ல் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
என்எப்எல் முன்னாள் ஆணையர் பால் டாக்லியாபு காலமானார்
-
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி; 100 பேர் மாயம்
-
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பெங்களூரு சிறை: கைதிகள் மது அருந்தி ஆட்டம் போடும் வீடியோ வைரல்
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை அதிகரிப்பு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
-
டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா
-
பீஹாரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது; ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாப பலி