வீட்டில் பதுக்கிய நாட்டு வெடிகள் 20 கிலோ அழிப்பு

ஆவடி: பட்டாபிராமில் நான்கு பேர் இறந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட, 20 கிலோ நாட்டு வெடிகளை போலீசார் நேற்று அழித்தனர்.

ஆவடி பட்டாபிராமில், விஜயன் என்பவரிடம் நாட்டு வெடி வாங்க வந்த நான்கு பேர், நாட்டு வெடி வெடித்து, கடந்த 19ம் தேதி உயிரிழந்தனர்.

இதனால், ஆவடி ப ட்டாபிராம் தேவராஜபுரத்தை சேர்ந்த மற்றொரு வெடி வியாபாரி குமார், 48, அதிர்ச்சி அடைந்தார்.

கடந்த 21ம்தேதி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 20 கிலோ நாட்டு வெடிகளை, யாருக்கும் தெரியாமல் கடைக்கு எடுத்துச் சென்றார். பட்டாபிராம் போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட, 16 வகையான, 20 கிலோ நாட்டு வெடிகளை, அன்னம்பேடு, மாப்பிள்ளை சேம்பரில், 5 அடி பள்ளத்தில் கொட்டி, டீசல் ஊற்றி நேற்று அழித்தனர்.

Advertisement