மேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

நாயண்டஹள்ளி: மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து, மேற்கு வங்க மாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரசன்ஜித் தாஸ், 29. பெங்களூரு ஹுடியில் வசித்தார். கேரேஜில் தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று மதியம் மைசூரு ரோட்டில் இருந்து ஹுடிக்கு தன் நண்பர் மிதுன் என்பவருடன் ஆட்டோவில் சென்றார்.

நாயண்டஹள்ளி மேம்பாலத்தில் ஆட்டோ சென்றபோது, ஆட்டோவை நிறுத்த கூறிய பிரசன்ஜித் தாஸ், ஆட்டோவி ல் இருந்து இறங்கி, மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குடும்ப தகராறில் தற்கொலை செய்தது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. பேட்ராயனபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement