டில்லி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு
புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் மற்றும் டில்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் டிஜிபியும் இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொண்டார்.
இந்த உயர்மட்ட பாதுகாப்பு கூட்டம் குறித்து அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: டில்லி கார் குண்டுவெடிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினேன்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் எங்கள் விசாரணை அமைப்புகளின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
நலம் விசாரிப்பு
இதற்கிடையே ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து திரவுபதி முர்முவிடம் அமித்ஷா விளக்கி உள்ளார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இன்னும் பத்து நாளில் பார்லிமென்டில் எவனெல்லாம் எப்படி வகை வகையா கூச்சல் போடுகிறான் என்று கவனித்தால், உண்மையான தேச பக்தி உள்ளவன் யார், எவன் நம் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்குவான் என்பது தெரியும்.
வேறு மாநிலத்தில் நடந்து இருந்தால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லலாம் எல்லாம் கெட்ட நேரம் தான்.
திமுகவின் கொத்தடிமைகள் அறிய வேண்டிய விஷயம் - தீவிரவாதம் வேறு ...... சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது வேறு .....
மக்களின் பாதுகாப்பு என்பது அரசியல் தலைவர்கள் பணியோ அல்லது ஆட்சியாளர்கள் பணியோ மட்டுமல்ல. மதத்தலைவர்கள் பணியும்கூட. குறைந்த பட்சம் கொடூரத்தை கண்டிக்கவாவது செய்யலாமே. கொடூரங்களுக்கு எங்கள் மதத்தின் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாய் சொல்லி, சொல்லியதை செயலில் காட்டினால் எவ்வளவோ நல்லது.
இந்த மாதிரியான கொடூர சம்பவங்களை ஏன் எந்த மதத்தலைவர்களும் கண்டிப்பதில்லை? குறிப்பாக இந்த கொடூரர்களின் மதத்தலைர்வர்களில் எவருமே கண்டிக்கிறதில்லை? ஆன்மீகமும் அதை வளர்க்கும் மதங்களும் மக்களது பாதுகாப்பையும் முன்னிறுத்தாவிட்டால் அதெப்படி? கொடூரங்களை கண்டுக்காமலும் கண்டிக்காமலும் இருக்கும் எந்த மதமும் பயங்கரவாதத்தைவிட மோசமானவையே.
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்று ஒரு பழைய சினிமா பாடல் இப்போது காதில் கேட்கிறது.
அப்பத்துக்கு மதம் மாறிய கூட்டத்திற்கு இதை விட இன்னொரு பாட்டு கேட்கும்
பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழிக்கப்படவேண்டும்.மேலும்
-
பீஹாரில் மீண்டும் தேஜ ஆட்சி: கருத்துக்கணிப்புகளில் தகவல்
-
டில்லி குண்டுவெடிப்பில் அம்பலமான 'ஒயிட் காலர்' பயங்கரவாதம்: உலகம் முழுவதும் பரவிய நெட்வொர்க்
-
ககன்யான் திட்டத்தில் பாராசூட் ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு
-
கோர்ட் வெளியே குண்டு வெடிப்பு: பாகிஸ்தானில்12 பேர் பலி
-
சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது
-
மூன்றரை மணி நேரம் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த கார்; டில்லி குண்டுவெடிப்பில் புதிய தகவல்கள்