சிறுமிக்கு தொல்லை தொழிலாளி கைது

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போலீ சார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 47; கூலி தொழிலாளி. இவர், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து பெருமாளை கைது செய்தனர்.

Advertisement