ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

கடலுார்: கடலுார் அருகே ஏரியில் மூழ்கி ஒருவர் இறந்தார்.

கடலுார் முதுநகர் அடுத்த அன்னவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்,42; திருமணமாகாதவர். நேற்று காலை இயற்கை உபாதைக்காக சென்றவர் கால் தவறி ஏரியில் மூழ்கி இறந்தார். அவரது உடல் ஏரியில் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement