பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

சிதம்பரம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு திரும்பவரம், நரிக்கரம்பை பகுதியை சேர்ந்த ஈசாக் மகன் பால்ராஜ், 32; இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலையில், பி.எச்.டி., படிக்கும் போது காதலித்துள்ளனர்.

தொடர்ந்து, அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பால்ராஜிடம் கூறியும் அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement