துங்கபத்ரா தண்ணீர் திறக்க சிவகுமார் மறுப்பு
பெங்களூரு: ''துங்கபத்ரா அணையில் இருந்து, இரண்டாம் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாது,'' என, துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
விஜயநகரா - கொப்பால் மாவட்ட எல்லையில் முனிராபாத் பகுதியில் துங்கபத்ரா அணை உள்ளது. கடந்த ஆண்டு அணையின் 19வது மதகு உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. தற்காலிகமாக மதகு நிறுவப்பட்டது. இந்த ஆண்டு பெய்த கனமழை அணை முழுதும் நிரம்பியது. முதல் பயிர் சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அணையில் உள்ள பெரும்பாலான மதகுகள் நல்ல நிலையில் இல்லாததால், அவற்றை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இரண்டாம் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தண்ணீர் திறக்கும்படி பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொப்பால், விஜயநகரா, ராய்ச்சூர், பல்லாரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகளுடன், துணை முதல்வரும், நீர்ப்பாசன அமைச்சருமான சிவகுமார் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த கூறுகையில், ''துங்கபத்ரா அணையின் மதகுகள் சரி செய்யும் வரை, அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது. கிடைக்கும் தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு பயிர் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க முடியாது. அணை எங்களுக்கு முக்கியம். விவசாயிகளை பா.ஜ., தலைவர்கள் தவறாக வழிநடத்த கூடாது,'' என்றார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு
-
செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!
-
பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து
-
ஆர்க்டிக் டெர்ன்... 35,000 கி.மீ. பறக்கும்
-
வித்தியாசமான செல்லப்பிராணிகள்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!