நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

1

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (நவ 14) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேத்தியை சீண்டிய தாத்தா கைது



தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே, பச்சகோட்டையை சேர்ந்தவர் துரை ராஜ். இவரது வீட்டிற்கு, கடந்த மே மாதம், கோடை விடுமுறைக்கு, மகள் வழி பேத்தி யான, 11 வயது சிறுமி சென்றுள்ளார். அப் போது, சிறுமிக்கு, பாலியல் ரீதியாக துரைராஜ் தொந்தரவு கொடுத்துள்ளார்.



இது குறித்து, திருவாரூரில் உள்ள குழந் தைகள் நல பாதுகாப்பு குழு மேற்பார்வை யாளரிடம், போனில் சிறுமி புகார் செய்தார். சிறுமியிடம் விசாரணை செய்த மேற்பார்வையாளர் சரண்யா, துரைராஜ் மீது, நன்னிலம் நன்னிலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், துரைராஜ் மீது நேற்று போக்சோவில் வழக்கு பதிந்தனர்.

சில்மிஷ சிறுவர்கள் சிக்கினர்



திருவாரூர் மாவட்டம், கருங்கங்குடியை சேர்ந்த, 6 வயது சிறுவன், ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். நவ., 9ம் தேதி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அதே ஊரை சேர்ந்த, 16 வயது சிறுவர்கள் இருவர், 14 வயது சிறுவன் என, மூன்று பேர், 6 வயது சிறுவனுக்கு, பாலியல் தொந் தரவு கொடுத்துள்ளனர். இதை, மொபைல் போனில் வீடியோவாக பதிந்துள்ளனர்.

வீட்டிற்கு சென்ற சிறுவன், சம்பவத்தை தாயிடம் தெரிவித்துள்ளான். திருவாரூர் மக ளிர் போலீசார், சிறுவர்கள் மூவர் மீதும், நேற்று போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர். போலீசார் மூவரையும், தஞ்சாவூரில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

பள்ளி ஆசிரியருக்கு 'கம்பி'



கரூர் மாவட்டம், குளித்தலை நெய் தலுார் வடக்கு கவுண்டம்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் கார்த்திகே யன், 35; திருமணமானவர். இவர், கரூர் அருகே வெண்ணைமலை தனி யார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரு கிறார். சில மாதங்களாக பள்ளியில் படித்து வரும், 14 வயது மாணவிக்கு கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கரூர் மாவட்ட சமூகநல அலுவலர் கனக வள்ளி, மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில், கார்த்திகே யனை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement