தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை அல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மை தான். வெயில், மழை, வெள்ளம் என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் பங்கு முக்கியமானது. உங்களால் தான் சென்னை நீர்நிலைகள் தூய்மையாக உள்ளது. தூய்மை பணியாளரகள் செய்வது வேலையல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. விடியும் போது சென்னை நகரம் தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் ஓய்வு அறை அமைக்கப்படும். 300 சதுர அடியில் ஓய்வு அறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6ம் தேதி முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தமிழகம் தான் கிளீன் சிட்டி என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் வாரிசுகள் உயர்கல்வி பெற்று, அரசு பதவிகளை பெற வேண்டும்.
மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் செய்து தரும். தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தன்னலம் கருதாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றுவோம். அரசு தனது கடமையை செய்யும். மக்களும் பொறுப்பாக இருந்து பொது இடங்களையும், நமது மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நிரந்தர பணியிடம் , செய்யும் பணிக்கு தகுதியான சம்பளம் கேட்ட உங்களுக்கு இந்த அப்பாவால முடிஞ்சது மூணு வேள சோறு மட்டும்தாம்மா! இருந்தாலும் நீங்க கவலைப் படாதீங்க! யாரும் குப்பைய தெருவுல எறியக் கூடாதுன்னு தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒரு புரட்சியையே இந்த அப்பா உண்டு பண்ணி இருக்கேன்! உங்களுக்காக ! ஆஹ இப்ப உங்களுக்கு எல்லாம் சந்தோசம் தானே? ஆஹ ......
அடேங்கப்பா நோபிள் வழங்கப்பட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட வேண்டும்
ஏமாற்றுவேலை நிரந்தர பொழைப்பு
நீங்கள் ஆட்சியில் செய்ய வேண்டியது சேவை...ஆனால் செய்வது வேலை...
அவங்க கேட்டது பணி நிரந்தரம்...சம்பள உயர்வு...
அரசு கொடுத்தது மூணு வேளை சாப்பாடு...இதுதான் அரசின் லட்சணம்.
தூய்மை பணியாளர்களை ஏவல் துறையை வைத்து கொடுமை செய்து, அவர்களின் பணியை தனியாருக்கு தாரைவார்த்து .... இப்போ எதற்கு நீலி கண்ணீர் ??? 2026ல் அவர்கள் வாக்கு உங்களுக்கு சாத்தியமா இல்லை சப்பானின் துணை பிரதமரே... எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத உங்கள் பொற்கால ஆட்சி பற்றி தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் பதிய வேண்டும்... வாழ்க வளமுடன்...
அவங்க வேலை செய்யற அழகா நேர்ல அந்த பாருப்பா ஒரு வார குப்பை எல்லாம் எடுக்காம நாறுது யார் பணம் தரங்களோ அவனுகளுக்கு ஒழுங்கா குப்பையை அள்ளறானுங்க சும்மா சேவையாம் சேவை
ஏற்கனவே 12 மண்டலம் கோவை எடப்பாடி ஆட்சியில் தனியாரிடம் கொடுத்த பொது வாய் மூடி மவுனியா இருந்த கூட்டம் இன்று அலப்பறை
இன்பநிதிக்கும் நீ சலூட் தா அடிக்கணும் கொத்தடிமை கூமுட்ட
இவரு வேற சேவை, இடியாப்பம்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு
சினிமா மாதிரியே கதை,திரைக்கதை, வசனம், பிட்பேப்பர் எல்லாம் இருக்கே!! நம்பிட்டோம் உங்க கட்சிய ஆட்சியில உட்காரவைத்து நாங்க எல்லாரும் சேவை செஞ்சோம். நீங்க வெச்சு செஞ்சுட்டீங்க.மேலும்
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் அறிவிப்பு
-
தமிழகம் வேண்டாம்; தொழில் தொடங்க ஆந்திரா தான் சரியான இடம்; ஜகா வாங்கியது தென்கொரிய நிறுவனம்
-
காஷ்மீர் போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்ந்த சம்பவம் தற்செயலானது: உறுதி செய்தது மத்திய அரசு
-
விழுந்து நொறுங்கிய குட்டி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைவு; 2 நாட்களில் மட்டும் ரூ.2800 சரிவு
-
செல்லமே 100வது வாரம்! உங்களுக்கு நன்றி!!!