20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு நழுவிவிட்டது: அண்ணாமலை கொந்தளிப்பு
சென்னை: தென்கொரியாவை சேர்ந்த வாசவுங் பன்னாட்டு நிறுவனம் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக முதல்வர் ஸ்டாலினும், தொழில் துறை அமைச்சரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நிலையில், அவர்கள் பெருமையாக அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு நகர்ந்து வருகின்றன. தென் கொரிய நிறுவனம் வாசவுங் ரூ. 1720 கோடி முதலீட்டில், 20,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பெரிய அளவிலான காலணிகள் உற்பத்தி நிலையத்தை அமைக்க ஒப்புக் கொண்டதாக தமிழக தொழில் துறை அமைச்சர் அறிவித்தார்.
3 மாதங்களுக்குள், இந்த முதலீட்டை ஆந்திரப்பிரதேசத்துக்கு மாற்ற வாசவுங் தீர்மானித்துள்ளது. பிற மாநிலங்கள் உலகளாவிய உற்பத்தியை ஈர்க்க வேகமாக செயல்படும் நேரத்தில், அலட்சியம் மற்றும் நிர்வாகப் பற்றாக்குறையால் தமிழகம் தனது நிலையை இழந்து வருகிறது.
தமிழக ஆட்சி நிர்வாகத்தின் மீதான சாதகமான எண்ணம் இல்லாததால் சர்வதேச நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. ஒரு காலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்
அவரது அறிக்கை: கொரிய நாட்டைச் சேர்ந்த வாசவுங் நிறுவனம், தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன்?
வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது. இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள், என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?
முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார். இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழகத்தை தேடி வரும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
ஐயா, 20 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு முக்கியமா அல்லது குடும்பம் மற்றும் உடன்பிறப்புகளின் வரும்படி முக்கியமா? அடுத்து மற்றொரு நாட்டிற்கு பயணம் போனால் இதைவிட வேலைவாய்ப்பு தரும் சந்தர்ப்பம் உண்டாகும்.
ரூ 200 ஊபிக்கள் இருக்கும் வரை தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்காது
அண்ணாமலை கட்டுமானத் தொழிலை ஏன் பெங்களூரில் துவங்கினார்? தமிழ் நாட்டில் துவங்கி வேலை வாய்ப்பு கொடுத்திருக்கலாமே?
ரெண்டு கோடி இருக்க பயமேன்?
ஒவ்வொரு வருடமும் இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று 2014 தேர்தலின்போது முழக்கமிட்ட மோடி இதுவரை 24 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டார் ஆனால் பீஹாரிகள் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகிறார்களே ஏன் - பதில் சொல்ல ஆட்டுக்குட்டியும் தகரடப்பவுமே சொத்து என்று சொன்ன 420 அண்ணாமலை 2000 கோடி ஒன்றிய அரசின் நிதி உதவி பெறுவது எப்படி என்றும் பதில் சொல்ல முடியுமா
இன்னமும் ஊழல் சாம்ராஜ்யத்தில் உருளும் திருட்டு குடும்ப த்ரவிஷன்கள் வேண்டுமா அல்லது நேர்மையின் சிகரம் அண்ணாமலையின் ஆட்சி வேண்டுமா?
தமிழகம் செழிக்குமா அல்லது பாஜக ஆர்எஸ்எஸ் செழிக்குமா என்று போக போக தான் தெரியும் என்று மக்கள் கூறுகின்றனர்.
கலக்சன் , கமிசன் , கரப்சன் இதை கொள்கையாக உள்ள தமிழ்நாட்டில் இருபவர்கள் போகாமல் இருப்பதாய் பெரிய அதிஸ்டம்தான் .
தென் கொரியா நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் இந்தியை உற்பத்தி செய்து அதனை திணித்து தமிழை அழித்துவிடும் என்பதால் அதனை திராவிட மாடல் அரசு தடுத்து நிறுத்தி விட்டது
இன்றைய சூழலில் பெரிய அளவிலான வெற்று நிலங்கள் எல்லாம் விவசாயிகளிடம் இருந்து திமுக அதிமுக கட்சி மற்றும் பெரிய முதலாளிகளிடம் சென்று விட்டது. அல்லது பலரிடம் சிதறுண்டு விட்டது. விவசாயிகளிடம் நிலம் பிடுங்குவது எளிது. ஆனால் அதிகார வர்க்கத்தினர் தங்கள் வசம் உள்ள எதனையும் விட்டுக்கொடுக்க விடமாட்டார்கள்.
இந்த தொழிற்சாலை ஆந்திராவுக்கு மாறிய காரணங்கள் இரண்டு
1 Samsung Electronics தொழிற்சாலையில் CITU செய்த வேலை நிறுத்தவும் அதனால் அவர்களுக்கேற்பட்ட 800 கோடி நஷ்டமும் . இதை தமிழக அரசு நிகழாமல் தோழமைக்கட்சிகளின் நட்புக்காக தடுக்கவில்லை தடுத்திருக்க வேண்டும். தென் கொரியாவில் தொழிலதிபர்கள் ஒற்றுமை மிக வலியது. Samsung இந்த பாத அணி நிறுவனத்தை எச்சரித்து இருக்க வேண்டும் .
2 ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலீடுகள் தன மாநிலத்தில் வர ஓயாமல் உழைக்கிறார் மத்திய அரசுடன் தொடர்பிலும் உள்ளார் . அமெரிக்காவின் அதிக வரி க்கொள்கையால் ஆந்திராவுக்கு நஷடமான
வருவாயை மீட்டுக்கொடுக்க மத்திய அரசும் தன பங்கை ஆற்றுகிறது .
இதெல்லாம் பற்றி தமிழக அரசுக்கு கவலைப்படவோ உழைக்கவோ நேரம் இல்லை அவர்கள் குறியெல்லாம் எப்படி சுருட்டுவது என்பது தான்
இதில் ஏமாற்றம் அடைய ஒன்றுமில்லையே.
ஏற்கனவே வெற்று வெள்ளையறிக்கை காண்பித்து விட்டார்களே.