குரோஷிய அணி தகுதி * உலக கோப்பை கால்பந்து தொடருக்கு..
ரிஜேகா: அமெரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு, குரோஷிய அணி தகுதி பெற்றது.
'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலக கோப்பை தொடருக்கு முன்னேறும்.
குரோஷியாவின் ரிஜேகா நகரில் 'எல்' பிரிவு லீக் போட்டி நடந்தது. 2018ல் பைனலுக்கு முன்னேறிய குரோஷியா, பரோ ஐலாண்டு அணியை சந்தித்தது. குரோஷிய அணிக்கு ஜிவார்டியல் (23), முசா (57), விலாசிச் (70) கைகொடுக்க, 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை 7 போட்டியில் 6 வெற்றி, 1 'டிரா'வுடன் 19 புள்ளி பெற்று முதலிடத்தை உறுதி செய்தது. ஒரு போட்டி மீதம் உள்ள நிலையில் குரோஷிய அணி, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
சிக்கலில் ஜெர்மனி
'ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஜெர்மனி 2-0 என லக்சம்பர்க்கை வென்றது. சுலோவாகியா 1-0 என வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. பட்டியலில் ஜெர்மனி, சுலோவாகியா தலா 12 புள்ளியுடன் 'டாப்-2' இடத்தில் உள்ளன. நவ. 17ல் நடக்கும் கடைசி லீக் போட்டியில் இந்த இரு அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
'ஜி' பிரிவில் நெதர்லாந்து, போலந்து மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது. நெதர்லாந்து (17), போலந்து (14) முதல் இரு இடத்தில் உள்ளன.
மேலும்
-
ஜம்மு-காஷ்மீரில் சோகம்: கார்-லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி
-
'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர்...கலப்பட நெய்: தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி ஆலை
-
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை
-
தேர்தல் முடிந்ததும் 'அந்த சார்' உள்ளே போவார்: நாகேந்திரன்
-
எதிர்பாராததை எதிர்பாருங்கள்: நிருபர்களை குழப்பிய கமல்
-
டில்லி தமிழ் சங்கத்துக்கு சிருங்கேரி சுவாமி விஜயம்