காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே; அது ஒரு கம்பெனி: சீமான் கடும் தாக்கு
திருச்சி: காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே, அது இப்போது ஒரு கம்பெனியாகவே உள்ளது என சீமான் கடுமையாக சாடி உள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும். காங்கிரஸ் தோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சிதான். காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமையே, காங்கிரசை வீழ்த்துவதற்கு தான் நான் களத்திற்கு வந்தேன். தமிழகத்தில் காமராஜர் மறைவுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது. தற்போது இருப்பது ஒரு கம்பெனி தான்.
தோள்களில்...!
எனக்கு இருக்குற வலியும், வன்மமும் உலகத்துல யாருகிட்டையும் சொல்ல முடியாது. திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டுதான் காங்கிரசும், பாஜவும் வசதியாகப் பயணம் செய்கின்றன. தமிழகத்தில் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் என்ன வேலை இருக்கிறது?
தூய்மைப் பணியை தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தம் விட்டுவிட்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை தராமல் 3 வேலை உணவுக் கொடுப்பது, அவர்களை சமாதானப்படுத்தத்தான். இவ்வாறு சீமான் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுதொழில் தயாரிப்புகளை வாங்குவதற்கு 83 ஒப்பந்தங்கள்
-
நிறுவன அறிவிப்புகள்
-
'எம்-கேஷ்' இனி கிடையாது: எஸ்.பி.ஐ., அறிவிப்பு
-
'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'
-
வடமாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி: கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை சரிவு
-
குறையாத கழிவுப்பஞ்சு விலை: லீவு விட ஓ.இ.,மில்கள் முடிவு
Advertisement
Advertisement