'எம்-கேஷ்' இனி கிடையாது: எஸ்.பி.ஐ., அறிவிப்பு

வா டிக்கையாளர்கள் தங்களின் இணையம் வாயிலாக, மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் 'எம்-கேஷ்' பரிவர்த்தனை சேவையை, நவம்பர் 30ம் தேதிக்குப் பிறகு நிறுத்தப் போவதாக, பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

எம்-கேஷ் என்பது பயனாளி பதிவு இல்லாமல் பணம் அனுப்புவது அல்லது பெறுவதற்கான வழியாகும். ஆன்லைன் எஸ்.பி.ஐ., மற்றும் 'யோனோ லைட்' ஆகிய தளங்களில் இந்த சேவை தற்போது நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பாதுகாப்பான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் மற்ற மின்னணு பணப் பரிமாற்ற முறைகளுக்கு மாறுமாறு, தன் வாடிக்கையாளர்களை எஸ்.பி.ஐ., வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, யு.பி.ஐ., ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ்., ஆகியவை வழியாக பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், எம்-கேஷ் வாடிக்கையாளர்கள், பிம் எஸ்.பி.ஐ., பே செயலி வாயிலாகவும் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் கட்டணங்களைச் செலுத்துவதை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement