சிறுதொழில் தயாரிப்புகளை வாங்குவதற்கு 83 ஒப்பந்தங்கள்

சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, வெளிநாட்டு நிறுவனங்கள் பொருட்களை வாங்குவதற்காக, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின், 'பேம் டி.என்' நிறுவனம் சார்பில், வாங்குவோர், விற்போர் சந்திப்பு, கடந்த இரு தினங்களாக ஈரோட்டில் நடத்தப்பட்டது.

இதில் ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 42 நிறுவனங்களும், தமிழகத்தை சேர்ந்த, 650க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்த நிகழ்ச்சி வாயிலாக, தமிழக நிறுவனங்களிடம் இருந்து, 54.94 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன், 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Advertisement