தமிழகத்தில் வேகம் எடுக்கும் எஸ்ஐஆர் பணிகள்; 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம்
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்காக இதுவரை 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமானது நடந்து முடிந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. வாக்காளர்கள் இடம்பெயர்தல், மரணம் ஆகியவற்றை கணக்கெடுத்து பட்டியலில் இருந்து நீக்கவும், 18 வயதை எட்டியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சரியான வாக்காளர்கள் யார் என்பதை கணக்கெடுக்கும் பணிகளை தேர்தல் கமிஷன் வேகப்படுத்தி உள்ளது. அதன் முக்கிய கட்டமாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது.
முதல் கட்டமாக பீஹாரில் இந்த பணிகள் தொடங்கின. தற்போது தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, சரியான வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு வருகிறது. நவ.4ல் தொடங்கியுள்ள இந்த பணிகள் டிச.4ம் தேதி முடிகிறது.
இந்நிலையில் எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டு உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எத்தனை விண்ணப்ப படிவங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன என்ற விவரத்தை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 5.90 கோடி விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. சதவீதம் அடிப்படையில் இது 92.04% ஆகும்.
இந்த பணியில் 68,467 பூத் லெவல் அதிகாரிகளும், 2,37,390 பூத் லெவல் முகவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்.27, 2025ம் ஆண்டு கணக்கீட்டின் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர் இருக்கின்றனர். இதுவரை 5 கோடியே 90 லட்சத்து 13 ஆயிரத்து 184 பேருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. அதாவது, 92.04% வாக்காளர்களுக்கு விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு விட்டன.
மேலும்
-
சிறுதொழில் தயாரிப்புகளை வாங்குவதற்கு 83 ஒப்பந்தங்கள்
-
நிறுவன அறிவிப்புகள்
-
'எம்-கேஷ்' இனி கிடையாது: எஸ்.பி.ஐ., அறிவிப்பு
-
'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'
-
வடமாநிலங்களில் பனிப்பொழிவு எதிரொலி: கொப்பரை, தேங்காய் எண்ணெய் விலை சரிவு
-
குறையாத கழிவுப்பஞ்சு விலை: லீவு விட ஓ.இ.,மில்கள் முடிவு