பாஜ இலக்கு: பீஹாரை அடுத்து மேற்குவங்கம் தான்!
பீஹார் வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'கங்கை நதி, பீஹாரிலிருந்து மேற்கு வங்கத்திற்கு பாய்கிறது; அங்கு புதிய ஆட்சிக்கு வழி வகுத்து விட்டது' என, குறிப்பிட்டார். பீஹாரின் சீனியர் பா.ஜ., தலைவர்களும், 'இனி மேற்கு வங்கம் பா.ஜ., வசம்' என, பேச ஆரம்பித்து விட்டனர்.
'லாலு ஆட்சியில், பீஹார் எப்படி குண்டர்களின் ராஜ்ஜியமாக இருந்ததோ, அப்படித் தான் இன்று மம்தா பானர்ஜியின் மேற்கு வங்கம் உள்ளது; அங்கு, எந்த முன்னேற்றமும் இல்லை. பீஹாரை அடுத்து, பா.ஜ., ஆட்சி அமைக்கப்போவது, மேற்கு வங்கம் தான்' என, பீஹாரை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியுள்ளார்.
'உண்மையிலேயே, மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதா என்றால், சந்தேகம் தான்' என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். 'பீஹார் வெற்றிக்கு காரணம், பா.ஜ., கூட்டணியின் ஆட்சி மற்றும் கட்சியின் அமைப்பு; ஆனால், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் நிலை, பீஹார் போல அல்ல' என்கின்றனர்.
என்ன தான் ஹிந்துத்வா மற்றும் தொழில் முன்னேற்றம் என, பா.ஜ., பிரசாரம் செய்தும், 2020 சட்டசபை தேர்தலில், மம்தாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை. மம்தா பானர்ஜிக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது; கடந்த ஆண்டுகளில் மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் மிகவும் பலமான சக்தியாக உருவாகி உள்ளது. அவரது கட்சிக்கு 48 சதவீத ஓட்டு உள்ளது.
மேற்கு வங்கத்தின், 70 சதவீத வாக்காளர்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். இங்கு, திரிணமுலின் ஆதிக்கம் தான். நகரப் பகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றாலும், கிராமங்களில் இன்னு ம் மம்தா கட்சி தான் கோலோச்சுகிறது.
'பா.ஜ., ஒரு பக்கம், காங்., -இடது சாரிகள் இன்னொரு பக்கம் என, மும்முனை போட்டி வரும்போது, மம்தாவின் வெற்றிக்கு எந்த பிரச்னையும் இருக்காது' என, சொல்லப் படுகிறது. 'மேற்கு வங்கத்தில், பீஹாரைப் போலவே வெற்றிக் கனியை பறிப்போம் என, பா.ஜ., சொல்வது, அங்குள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு தான்' என்கின்ற னர் சக அரசியல்வாதிகள்.
பீகாரைப் பிடித்து-அங்க தேசம்- வங்க தேசத்தையும் பிடித்து விட்டால் - பிறகு திராவிட கேரளம் தான்!
தேர்தல் ஆணையம் தொடக்கி அணைத்து அரசு துறையும் உங்கள் அடிமை என்கின்றபோது மொத ஹிந்தியாவும் உங்க பாக்கெட்டில் தான் அனால் பாவம் மக்கள் மக்குகள் ஒன்றும் புடுங்க முடியாது என்ற மப்பு உங்க கும்பலுக்கு சற்று பொறுங்கள் உங்களுக்கு உரிய நேரத்தில் இரியவைகளை ஆப்பு மக்களே அடிப்பார்கள் சனநாயகம் இன்னும் சாகவில்லை
அடக்கி வாசிப்பது நல்லது.angu நிலைமை வேறு. எனவே ரொம்ப ஆட்டம் போடாமல் அமைதியாக சாதித்து காட்டுங்கள்.
அடுத்த தேர்தலில் பிஜேபி ஆட்சி அமைக்காவிட்டால் - இந்திய வரைபடத்திலிருந்து மேற்கு வங்கம் - முழுவதும் - மறைந்து விடும்.
மேற்கு வங்கம் ஏற்கனவே மினி பாக்கிஸ்தான் ஆகிவிட்டது
மேற்குவங்க ஹிந்துக்களை பாதுகாக்க மத்திய பிஜேபி அரசு பெருமளவு தோற்றுவிட்டது.
அதேபோல் ஊழல் அரசியல்வாதிகளையும் தண்டிக்க பிஜேபி பெருமளவு செயலற்றுவிட்டது
அய்யரே. இங்கு ஸ்டாலின் அரசை மட்டும் மத்திய அரசு தட்டிக்கேட்டதா? முடியலயே
மம்தா பனர்ஜீக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் என்பது வெறும் மாயை தான்.
1. சுமார் 1 1/2 கோடி பங்காளதேசிகள் மம்தாவுக்குத்தான் வோட்டுப்போடவேண்டிய கட்டாயம்.
2. 20% க்குமேல் உள்ள இந்திய முஸ்லிம்கள் மேற்குவங்கத்தில் மம்தாவுக்குத்தான் வோட்டு போடுவார்கள்
3. மேற்குவங்கத்தில் - பிஜேபி க்கு வோட்டளிக்கும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவது சகஜம். அதற்க்கு பயந்தே மேற்குவங்க ஹிந்துக்கள் TMC க்கு வோட்டளிக்கிறார்ர்கள்
SIR - பங்களாதேசிகளை வோட்டு போடவிடாமல் செய்யும்.
ARMY PROTECTION உடன் அடுத்த தேர்தல் நடந்தால் - மேற்குவங்கத்தில் பிஜேபி ஆட்சி கண்டிப்பாக அமையும்.
அரசியல் கட்சிகளுக்குவேண்டுமானால் யார் ஆட்சி அமைப்பது என்பது முக்கியம். பொதுமக்களுக்கோ யார் நல்லாட்சி செய்வார்கள், நல்லது செய்வார்கள் என்பது முக்கியம். இலவசங்களைக்கண்டு மயங்காமல் மக்கள் சிந்தித்து வாக்களிப்பது நல்லது. பிறகு நொந்துகொள்வது பயனில்லை.
திமுக அதிமுக ரெண்டும் மோசமான கட்சிகள். ஆனால் பிஜேபி அவர்களை விட படு மோசமான கட்சி. தமிழ்நாட்டுக்கு பிஜேபி வேண்டவே வேண்டாம்.
கட்டுமர திருட்டு திமுகவிற்கு தாங்கள் கொடுக்கும் முட்டு புது வகை முட்டா இருக்கு. வடிவேலு ஒரு படத்தில் வித்தியாசமா கூவுறான்னு சொல்வாரே, அது போல. ஹி...ஹி...ஹி...
எங்களுக்கு பிஜேபி ஆட்சிதான் வேண்டும். சொம்பு தூக்கிகளின் ராஜா வேண்டாம்
மம்தாவின் கட்சி மம்தாவோடு முடிந்துவிடும். ஆனால் பாஜக அப்படியல்ல. சித்தாந்தம் கொள்கை மற்றும் ஆர்ஸ்ஸ் தொண்டர்கள்
பக்கபலமுள்ள இயக்கம். மேற்கு வங்கத்தை அடைந்தே தீரும். உளுத்துப் போன காட்சி நடத்திக் கொண்டிருக்கும் த்ரவிஷ கட்சிகளுக்கும் அதே கதிதான்
மம்தாவை அடக்கிவிட்டால் திராவிடம் தானே அடங்கிவிடும். தவிரவும் கள்ளக்குடியேறிகளை வைத்து தேர்தல் நடத்த தீம்க்காவுக்கு அதன் அடிப்படை வாதம் கைகொடுக்காது.
வாழ்த்துக்கள் ஆனால் வெற்றி பெறுவது சிறிது கடினம் தான் அதே போலத்தான் தமிழகமும். திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தான். மக்களுக்கு நன்றாக தெரியும் 2 கட்சியும் ஊழலில் திகைத்தவர்கள் என்று. இப்போது TVK கும் கூட்டம் இருக்கிறது ஆனால் எந்த அளவுக்கு அது வாக்குகளாக மாறும் என்பது கணிக்க முடியாது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்
-
தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது; 'ஷாக்' கொடுத்த தென்கொரிய நிறுவனம்
-
மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள்!
-
உ.பி.,யில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்
-
காசா விவகாரம்: அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் தீர்மானம்
-
உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்