உ.பி.,யில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்

1


லக்னோ: உபி., சோன்பத்ராவில் கல்குவாரியில் பாறைகள் சரிந்ததில் 15 தொழிலாளர்கள் சிக்கினர். தற்போது அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ராவில் கல்குவாரி இயங்கி வருகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அப்போது திடீரென பாறைகள் சரிந்து தொழிலாளர்கள் சிக்கினர். 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி
கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதுவரை தொழிலாளர் ஒருவர் உடல் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


கல்குவாரி சட்டவிரோதமாக இயங்கி வந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement