உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிகரித்து வரும் விலை உயர்வால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், மாட்டிறைச்சி, காபி மற்றும் பிற விவசாய பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இவ்வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். இதன் தாக்கம் சமீபத்தில் நடந்த நியூயார்க் மேயர், நியூ ஜெர்சி மற்றும் விர்ஜினியா மாகாணங்களுக்கான கவர்னர் தேர்தல்களில் எதிரொலித்தது. இந்தத் தேர்தல்களில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வி அடைந்தது.
இதையடுத்து, மாட்டிறைச்சி, அன்னாசி பழம், காபி, வாழைப்பழங்கள், தேநீர், பழச்சாறுகள், கொக்கோ, சில உரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பொருட்கள் மீதான பரஸ்பர வரிகளை நீக்குவதாக டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்நடவடிக்கைக்கு, அமெரிக்க உணவு தொழில்துறை சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. அமெரிக்க மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இந்த உத்தரவினால் குறையும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டிரில்லியன் டாலர் கடனை அடைக்க வரி வருவாய் வேண்டியுள்ளது. அதே வரி மக்கள் தலையில் விடிகிறது. ஆக கழுதை முன்னே போனால் கடிக்கும். பின்னே போனால் உதைக்கிறது.
இனி மேற்கத்திய நரிகளின் விஷமத்தனம் இந்தியாவிடம் பலிக்காது...
ட்ரம்ப் மாதிரி இந்த உலகத்தில் யாருமே இல்ல ஒரு முடிவு எடுக்கும் போது நன்றாக சிந்தித்து அது மக்களுக்கு பாதிக்குமா அன்றாட வாழ்க்கையில் எல்லாம் யோசிச்சி முடிவு எடுக்கணும் தலைவர் பதவிக்கு வரும்போது நாம இந்த பதவிக்கு தகுதியான ஆலா இல்ல எல்லாம் யோசிக்கணும் அதே மாதிரி மக்களும் யோசிக்கணும் வாக்களிக்கும்போது இவன் தகுதியானவனா என்று யோசிக்கணும் அப்போது தான் எல்லாமே நல்ல நடக்கும் இல்ல என்றால் எல்லாமே அரோகரா தான் இப்போ யோசிச்சி புண்ணியம் இல்ல ..
இந்திய ஏற்றுமதியில் முக்கியமானது மருந்து, ஆடை, அரிசி, கோதுமை. பிரேசில் பழங்கள், காபி, காய்கறி இன்னும் பல அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. எனவே ட்ராம்பால் தாக்கு பிடிக்க முடியாது என்பது அறிந்ததே.
ஏதோ ஒன்று தன தலையில் தானே .......
தமிழில் பழமொழி : யானை தன் தலையில் தானே மண் வாரிப்போட்டது போல தான் இவரது நிர்வாகம். பாவம் அமெரிக்க மக்கள் முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாத நிலைமை.
சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று தலைப்பு இருந்தால் பொருத்தம்.
தமிழக விவசாயிகள் 500 பேருக்கு விசா தாருங்கள். அமெரிக்கா பரந்த நிலப்பரப்பளவில் எல்லா மரங்கள், செடிகளைப் பயிரிட்டு புதுசா தருவோம். உங்க மண்ணிலேயே விவசாயம் அமோகமா செய்யலாம். கவலை வேண்டாம்.
இந்தியா உட்பட அனைத்தும் நாடுகளின் மீதும் இறக்குமதியை உயர்த்தி மோடியின் நண்பர் ட்ரம்ப் தன ஆதிக்கத்தை காட்டிவிட்டார். இதனால் இந்தியா பயங்கற பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று பயர் விட்ட அறிவார்ந்த ஆத்மாக்கள் எல்லாம் வெளிய வாங்க .மேலும்
-
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 124 ரன் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்ரிக்கா!
-
பக்கத்துக்குப் பக்கம் தகவல் பெட்டகம்
-
'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை
-
மக்களைப் பாதுகாக்க அனைத்தையும் செய்ய வேண்டும்: சசி தரூர்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
லாரி மீது பஸ் மோதி விபத்து; பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம்