வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை: 'தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கை அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ள நிலையில், 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.
6 செ.மீ., இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, ராதாபுரம், துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 7; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி மற்றும் துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தலா 6 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.
இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
அதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில், இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மித மான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 21ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கடலுார், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதற்கான, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம்.
காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சூறாவளி வீசும் சென்னை, திருவள்ளூர், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், சில இடங்கள் மற்றும் காரைக்காலில், நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது; 'ஷாக்' கொடுத்த தென்கொரிய நிறுவனம்
-
மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள்!
-
உ.பி.,யில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்
-
காசா விவகாரம்: அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் தீர்மானம்
-
உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்
-
ஜம்மு-காஷ்மீரில் சோகம்: கார்-லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி