லாரி மீது பஸ் மோதி விபத்து; பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம்

1

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் பெங்களூரு பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர்.


பெங்களூரில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 60 பக்தர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 20 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேருக்கு கை, கால்கள் முறிந்து, தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement