தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
தூத்துக்குடி: தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏற்கனவே அரசு ஊழியர்கள் எல்லாம் அரசிற்கு எதிராக தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அதை திசை திருப்பி மடை மாற்றி, திமுக அரசு அவர்களை மிரட்டி பணிய வைத்து இருக்கிறது. நிரந்தர பணி கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை அடித்து துரத்தி வீடு வரை சென்று மிரட்டினார்கள். இன்று அவர்களை காலையில் அழைத்து சோறு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை சரியான வகையில் இயக்கவில்லை. நான் ஏற்கனவே நிறைய பேட்டி கொடுத்து இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். தமிழகத்தில் நாங்கள் 200 தொகுதிக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறுவோம். குளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுக்களை அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே மக்கள் தயாராகி விட்டார்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இது ஒன்றுமே செய்யாத அரசு, விடியாத அரசுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
தட்டு தடுமாறும் பிரசாந்த் கிஷோர்!
முன்னதாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
எங்களது கூட்டணி குறித்து 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்பு அறிவிப்போம். பீஹாரில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார்.
பிரசாந்த் கிஷோரே தட்டு தடுமாறிட்டு இருக்காரு. அவர் ஆலோசனை வழங்கி என்ன நடக்கபோகுதோ? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
வாசகர் கருத்து (16)
M Ramachandran - Chennai,இந்தியா
18 நவ,2025 - 20:13 Report Abuse
அறிவாரத்த நடை முறையாக பேச வேண்டும். வாய்க்கு வந்த படி காமடியாக எல்லாம் பேசக்கூடாது 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
18 நவ,2025 - 19:54 Report Abuse
இந்த தேர்தலில் ரெண்டு கோடி வடஇந்தியர்கள் ஓட்டுரிமை பெறுவதால், பிஜேபி மட்டுமே நூறு தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. இருநூறு தொகுதிகளுக்கு மேல் பிஜேபி தலைமையிலான கூட்டணி மிக எளிதாக பெறும் . 0
0
Reply
மோகன சுந்தரம் - ,
18 நவ,2025 - 19:46 Report Abuse
படித்த பண்பான அண்ணாமலையை தவிர்த்து விட்டு உங்களால் ஒரு வெற்றி பெற முடியாது. 0
0
Reply
Oviya Vijay - ,
18 நவ,2025 - 19:39 Report Abuse
0
0
vivek - ,
18 நவ,2025 - 21:17Report Abuse
நடக்கும் ஓவியரே.....இதயம் இருந்தா அது பாத்திரம் 0
0
Reply
V K - Chennai,இந்தியா
18 நவ,2025 - 19:19 Report Abuse
வாய்ப்பு இல்லை ராசா 0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
18 நவ,2025 - 19:10 Report Abuse
எடப்பாடியிடம் சொல்ல வேண்டும். பிஜேபி தயவு இல்லாமல் 25 சீட் கூட kidayaikadhu. அதனால் 50:50 பிஹரை போல ஜெயிக்க வைத்து காட்டுவோம். இதற்கு உடன் படிந்தால் நீங்கள் CM முடியாது என்றால் இப்போது நிலைமையில் எதிர் கட்சி கூட அகா முடியாது. இதை புரிய வையுங்கள். 0
0
Reply
Mario - London,இந்தியா
18 நவ,2025 - 19:04 Report Abuse
பகல் கனவு 0
0
vivek - ,
18 நவ,2025 - 21:17Report Abuse
லண்டன் முட்டுச்சந்து 0
0
Reply
Modisha - ,இந்தியா
18 நவ,2025 - 18:49 Report Abuse
உளறல் . அதிமுக பிஜேபி தொண்டர்கள் மத்தியில் இன்னமும் ஒற்றுமை ஏற்படவில்லை . 0
0
Reply
Raja k - ,இந்தியா
18 நவ,2025 - 18:32 Report Abuse
பீகார்ல 10,000 கொடுத்தீங்க, தமிழ்நாட்டுல 20,000 கொடுங்க 200 கிடைக்கும் 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
18 நவ,2025 - 18:28 Report Abuse
பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான். தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை.. 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
கோவை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
தமிழகத்தில் இந்தாண்டு ரேபிஸ் தாக்குதலுக்கு 28 பேர் பலி: நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிப்பு
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
பெங்களூரு கடலைத் திருவிழா
-
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அட்வைஸ்
-
எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ முடக்கம்: நெட்டிசன்கள் அவதி
Advertisement
Advertisement