ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அட்வைஸ்
புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அது பிழை செய்ய வாய்ப்பு உள்ளது என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் அளித்த பேட்டி பின்வருமாறு: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை சந்தேகத்துடன் அணுக வேண்டும். கூகுளின் ஜெமினி போன்ற அதிநவீன மென்பொருள் கூட தவறுகளைச் செய்யக்கூடும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அது பிழை செய்ய வாய்ப்பு உள்ளது.
முடிந்தவரை துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக, நாங்கள் மேற்கொள்ளும் பணி பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் சில பிழைகளுக்கு ஆளாகிறது. மக்கள் இதனை சிறந்தவர்களாக இருப்பதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் ஏஐ சொல்லும் அனைத்தையும் குருட்டுத்தனமாக நம்பக்கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும். இதனை கவனமுடன் கையாள வேண்டும். இவ்வாறு சுந்தர் பிச்சை கூறினார்.
He is right. Blindly do not follow Artificial Intelligence. It solely operates on information & intelligence we feed. It is not infallible. Lets trust our brain more.
ஏஐ தொழில்நுட்பத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. தேர்தல் நேரங்களில் பல இலவசங்களை மக்கள் வரிப்பணத்தில் மக்களின் வாக்குக்காக அள்ளிவீசும் திமுக போன்ற கட்சிகளையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பவே கூடாது. எல்லாவற்றிலும் சுயபுத்தியை உபயோகப்படுத்துங்கள்.
இந்த தொழில்நுட்பத்தை வைத்துதான் வரும் தேர்தலில் திமுக சித்து விளையாட்டுகளை விளையாட போகிறது . உங்க அறிவுரையை தமிழக மக்கள் எந்த அளவுக்கு கேட்டு நடப்பார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும். இங்கு எடுபடுமா என்பது கேள்வி குறியே
"செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில் நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். அது பிழை செய்ய வாய்ப்பு உள்ளது." நூற்றுக்கு நூறு உண்மையே
நானறிந்தவரை சாமான்யனுக்கும் புரியும்படிச் சொல்வதானால், அது ஒரு மேம்பட்ட தேடுதல் கருவி. இணைய தளங்களில் பதிவு செய்யப்படாத எதனையும் செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில் நுட்பம் நமக்குத் திரட்டித் தர இயலாது. இணைய தளங்களில் பதிவு செயப்படுபவை உண்மையாக இல்லாவிடில், பெறப்படும் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை அதனை தேடுதல் கருவியின் குறையாக எண்ணக்கூடாது. பொதுவாக பெரிய தொடர் மென்பொருள் எழுதுவோர் திரும்பத் திரும்ப எழுத வேண்டிய நிகழ்வுக்கான கட்டளைகளை SUB ROUTINE a named block of code that performs a specific task and can be reused multiple times within a larger program, making code more efficient and readable என்ற வகையில், ஒரு தொகுப்பாக எழுதி வைத்திருப்பார்கள் தேவையான இடத்தில் அந்தக் கட்டளைகளை மறுபடியும் எழுதும் வேலையைக் குறைக்க அந்த தொகுப்பை அப்படியே அங்கே சொருகுவார்கள் இப்படித் திரும்பத் திரும்ப நடக்கும் நிகழ்வுக்கான கட்டளைகளை செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில் நுட்பம் மூலம் உருவாக்கினால் மென்பொருள் உருவாக்கும் நேரம் குறையும் ஆட்களும் குறைய வாய்ப்புள்ளது. நிறுவனத்திற்கு ஆதாயம். இதனால் வேலை வாய்ப்பு குறையும் ஆனால், இந்த திறமையை வளர்த்துக் கொண்டால் புதிய செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில் நுட்பக் கருவிகளை நம்மால் உருவாக்க முடியும் இளைஞர்கள் தங்களை இதற்கேற்றபடி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்மேலும்
-
கடும் மேகமூட்டத்தால் வாகனங்கள் இயக்க சிரமம் மலை பாதையில் பகலில் ஓர் இரவு
-
காதல் மனைவி கொலை கணவன் வெறிச்செயல்
-
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் 'சூட் ரூம்' கேட்கும் பேராசிரியர்கள்
-
மனைவியை வெட்டிய கணவருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை
-
சத்திரம் புல்மேடு வனப்பாதையில் முதல் நாள் 788 பக்தர்கள் சென்றனர்
-
இன்று இனிதாக (19/11/2025)