10வது முறையாக பீஹார் முதல்வர்; நவ.,20ல் பதவியேற்கும் நிதிஷ்!

1

பாட்னா: நவ.20ம் தேதி பீஹாரின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கின்றனர்.

பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்து இருக்கிறது. பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நிதிஷ்குமார் மீண்டும் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதற்கு விடை கிடைக்கும் வகையில் நவ.20ம் தேதி 10வது முறையாக பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்க உள்ளனர்.

விழாவில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

நிதிஷ் குமாரின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது அங்கு காணப்படும் அரசியல் நிகழ்வுகளை இங்கே காணலாம்;

* பாஜ சட்டசபை குழுத் தலைவரை தேர்ந்தெடுக்க, உ.பி.துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை கட்சி மேலிடம் பார்வையாளராக நியமித்துள்ளது. மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் துணை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

* முதல்வர் பதவியேற்பு விழாவுக்காக பாட்னாவில் உள்ள காந்தி மைதானம் ஜரூராக தயாராகி வருகிறது.

* முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு முன்பே, நவ.18ம் தேதி கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக நிதிஷ்குமார் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்.

* ஆறு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் என்ற பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் புதிய அமைச்சரவை இருக்கும். இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் சமமான வாய்ப்பு கிடைக்கும் என பாஜ எண்ணுகிறது.

5.சபாநாயகர் பதவி இம்முறை பாஜவுக்கு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement