பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி சாம்பியன்

2

கொழும்பு: பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.



கொழும்புவில் நடந்த பைனலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய நேபாள அணி, 20 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 12 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதல்முறையாக பார்வையற்றோருக்காக நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்தத் தொடரில் தோல்வியையே சந்திக்காத அணியாக மகுடம் சூடிய இந்திய அணி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தியுள்ளது.

Advertisement