தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

1


மும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்டிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நவ.,30ம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்த நிலையில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக விலகிய நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


அணி விபரம்;

கேஎல் ராகுல் (கேப்டன்)

ரோகித் ஷர்மா

விராட் கோலி

ஜெய்ஸ்வால்

திலக் வர்மா

ரிஷப் பன்ட்

வாஷிங்டன் சுந்தர்

ரவீந்திர ஜடேஜா

குல்தீப் யாதவ்

நிதிஷ்குமார் ரெட்டி

ஹர்ஷித் ரானா

ருதுராஜ் கெயிக்வாட்

பிரசித் கிருஷ்ணா

அர்ஷ்தீப் சிங்

துருவ் ஜூரேல்


Advertisement