அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக தியாகம் செய்யயப்படும் ஜனநாயகம்: ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி: '' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்ஐஆர்) என்பது சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற போர்வையில் நாடு முழுவதும் குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த மூன்று வாரங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 16 பேர் மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலை என உயிரிழந்துள்ளனர். எஸ்ஐஆர் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை.
குடிமக்கள் தங்களைக் கண்டுபிடிக்க 22 ஆண்டுகள் பழமையான வாக்காளர் பட்டியலின் ஆயிரக்கணக்கான ஸ்கேன் செய்யப்பட்ட பக்கங்களைப் புரட்ட வேண்டிய ஒரு அமைப்பை தேர்தல் கமிஷன் உருவாக்கியுள்ளது. நோக்கம் தெளிவாக உள்ளது. சரியான வாக்காளர்கள் சோர்வடைந்து கைவிடுகிறார்கள். மேலும் ஓட்டுத் திருட்டு தடையின்றி தொடர்கிறது.
இந்தியா உலகிற்கு அதிநவீன மென்பொருளை உருவாக்குகிறது. ஆனால், தேர்தல் கமிஷன் இன்னும் ஒரு காகிதக் கட்டை அமைப்பதில் சிக்கித் தவிக்கிறது.
நோக்கம் தெளிவாக இருந்தால், பட்டியல் டிஜிட்டலில் இருப்பதுடன், தேடக்கூடியதாகவும், இயந்திரம் படிக்கக்கூடியதாகவும் இருக்கும். 30 நாட்கள் என்ற கண்மூடித்தனமான வேலையை தள்ளுவதற்கு பதில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்த தேர்தல் கமிஷன் போதுமான நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எஸ்ஐஆர் என்பது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி. குடிமக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற அழுத்தத்தால் ஓட்டுச்சாவடி அலுவலர்களின் இறப்புகள் நடக்கின்றன. ஆனால், அவை நிராகரிக்கப்படுகின்றன.
இது தோல்வி அல்ல. இது ஒரு சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்தப் பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
மச்சான் இன்னும் திருந்தவில்லை
ராகுல்காந்தியை பற்றி செய்தியை போட்டு நேரத்தை வீணடிப்பது தான் ஜனநாயகம் என்றால் அது மிகவும் அநியாயம்.....!
ஜனநாயக ரீதியாக மக்கள் எவ்வளவோ அடித்து தீர்ப்பு கொடுத்தும் இவர் மீ்ண்டும் மீ்ண்டும் வீம்பு பண்ணுகிறார்.
இவருக்கு சுப்ரீம் கோர்ட் வழியை காண்பிக்க வும்
உங்க கொள்ளு தாதா, பாட்டி, நிழல் பிரதமர் உன் அம்மா எல்லோரும் எப்போதோ சாக அடித்து விட்டார்கள். உனக்கு என்ன தெரியும் பாவம்....
பீகாரில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் யாருமே எங்களுடைய வாக்கு பறிக்கப்பட்டு விட்டது என்று ஒப்பாரி வைக்கவில்லை. ஏன் எந்த ஒரு கட்சியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவில்லை. இருப்பினும் இப்படி பிதற்றிக்கொண்டு திருக்கிறாய்.
பாவம்... இந்த ஆள் இப்படி புலம்பி புலம்பியே..... இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுத்துக் கொண்டார்
... பொய் சொல்ல , கதை கட்ட ஓர் அளவில்லாமல் மக்களை முட்டாள்கள் என்று நினைத்து பேசுவது தான் இவரது வீழ்ச்சி
முழுமையான ஜன நாயகம் என்பது இவரை நித்தி, லாலு வம்சத்தினர் அரியணையில் ஏற்றி வைப்பது தான் என்றால் - அது நமக்கு தேவை இல்லை!
ஜனநாயகத்தைப்பற்றி நீயும் உன்கட்சியும்,உன் குடும்பமும் பேசாதீங்க, தேச துரோகிகளா, ஹிந்து விரோதிகளா.
எவ்வளவு அடி வாங்கினாலும் நீ திருந்தமாட்ட.........மேலும்
-
ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து பொய் பிரசாரம்; பாக்., ஊடகத்தின் முகத்திரையை கிழித்த பிரான்ஸ்
-
நாம் யார் என்பதை பின்னடைவுகள் முடிவு செய்வதில்லை; தேஜஸ் விபத்து குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து
-
மே.வங்கத்தில் சாலையோரம் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்
-
ஓய்வுக்கு பிறகு எந்தப்பதவியையும் ஏற்க மாட்டேன்: கவாய் உறுதி
-
தென்காசி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
-
ரூ.262 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித்ஷா பாராட்டு