ரூ.262 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித்ஷா பாராட்டு
புதுடில்லி: போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நமது அரசு போதைப் பொருள் கடத்தல் கும்பல் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தீவிர விசாரணையின் போது, புதுடில்லியில் ரூ.262 கோடி மதிப்புள்ள 328 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது ஒரு திருப்புமுனை நடவடிக்கையாகும். பிரதமர் மோடியின் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, பல நிறுவன ஒருங்கிணைப்புக்கு இந்த நடவடிக்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் டில்லி போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும்
-
சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை: கார்த்தி
-
ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை; உக்ரைனை கடுமையாக சாடிய அதிபர் டிரம்ப்
-
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்: 5 பேர் பலி
-
ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து பொய் பிரசாரம்; பாக்., ஊடகத்தின் முகத்திரையை கிழித்த பிரான்ஸ்
-
நாம் யார் என்பதை பின்னடைவுகள் முடிவு செய்வதில்லை; தேஜஸ் விபத்து குறித்து ஆனந்த் மஹிந்திரா கருத்து
-
மே.வங்கத்தில் சாலையோரம் வீசப்பட்ட ஆதார் அட்டைகள்