தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு -முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் நம்பிக்கை
திண்டுக்கல்: ''அரசியலில் எதுவும் நடக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது,'' என திண்டுக்கல்லில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக கட்சிக் கூட்டத்தை உள் அரங்கில் நடத்தியது குறித்து அதன் தலைவர் விஜய் தான் பதில் அளிக்க வேண்டும். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, அ.தி.மு.க.வும் இணைந்தால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பது தமிழக மக்களின் கருத்து. தேர்தல் வாக்குறுதி அம்சங்கள் குறித்த விஜய் கனவு நனவாகட்டும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில்(எஸ்.ஐ.ஆர்) தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கும், இறந்தவர்களை நீக்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. படிவங்கள் நிரப்புவதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு இதைக்கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் எளிமைப்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர்., கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்.
பீஹாரில் பா.ஜ., கூட்டணி வெற்றிக்கு எஸ்.ஐ.ஆர்., தான் காரணம் என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கூறியிருப்பது அவர் உண்மையைத் தவிர வேறு ஒன்றும் பேச மாட்டார் எனக்காட்டுகிறது.
பத்திரிகையாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்களுக்கு தனிக்கொள்கை உள்ளது. அந்த கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.,வுடன் இணைவதற்கு அடிப்படை பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன் உடனான சந்திப்பும் நடக்கிறது. தினமும் பேசுகிறோம்.
தமிழக பா.ஜ., முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை, டி.டி.வி.தினகரன் சந்திப்பு நல்லது தான். வாழ்த்துக்கள். அனைவரும் ஒன்றினைய அதிகம் வாய்ப்புள்ளது.
என்னை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்துவது ஒருபோதும் நடக்காது. தனிப்பட்ட முறையில், நாம் பிறக்கும்போது எந்த பதவியுடனும் பிறக்கவில்லை, இழப்பதற்கு என்றார்.
மேலும்
-
தடுப்பு அமைக்காமல் பாலப்பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
'மஞ்சப்பை விருது' விண்ணப்பிக்க அழைப்பு
-
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு ஒரே இடத்தில் விண்ணப்பம் வழங்குவதாக குற்றச்சாட்டு
-
சாலை விபத்தில் ஒரே வாரத்தில் 5 பேர் பலி போலீசார் நடவடிக்கை தேவை
-
குப்பை கொட்டுமிடமாக மாறும் நீர்நிலைகள்...நிதியில்லாமல் என்ன செய்றது?: அரசு மீது பழிபோட்டு தப்பிக்கும் மாநகராட்சி
-
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி