லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, முன்னால் சென்ற லாரி மீது, பைக் மோதியதில் வாலிபர் பலியானார்.
சென்னை, போரூர் அருகே, மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் அமித் பாஷா, 21. நேற்று முன் தினம் இரவு, ஹமாஹா பைக்கில் பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற லாரியின் மீது பைக் மோதியதில், தடுமாறி கிழே விழுந்தார்.
இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அமித் பாஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்துார் போலீசார் உடலை மீட்டு, பிரதே பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமாபுரத்தில் பராமரிப்பற்ற பூங்கா மேய்ச்சல் இடமாக மாறிய அவலம்
-
பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்
-
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு
-
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
-
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
-
வெளிநாடுகளில் ஆதரவு திரட்டிய ஹமாஸ் முறியடித்ததாக இஸ்ரேல் புது தகவல்
Advertisement
Advertisement