மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மடப்புரத்தில் ஒருவர் கைது போலீஸ் காரை மறித்து போராட்டம்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் திருமண வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மதுரை போலீசார் கைது செய்த போது திருமண வீட்டார் போலீஸ் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தலில் நவ., 13 ல் பாலமுருகன் பாட்டி வீராயி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பூவந்தி போலீசார் இவ்வழக்கு தொடர்பாக பாலகிருஷ்ணன் 32, செண்பகமூர்த்தியை 23, கைது செய்தனர். இந்தவழக்கில் நந்தகுமார் 20, என்பவரை தேடி வந்தனர். அன்றே பாலமுருகன் தரப்பினர் 5 டூவீலர்களில் மதுரை சிலைமான் போலீஸ் எல்கைக்குட்பட்ட கல்மேடு நந்தகுமார் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசியதுடன் வாசலில் நின்ற டூவீலர், ஆட்டோக்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்து நந்தகுமாரின் தாயார் பூமாதேவி புகாரின்படி சிலைமான் போலீசார் பெத்தானேந்தல் பிரகாஷ், முகேஷ்கண்ணன், வெங்கட்டி உட்பட 7 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்த போலீசார் வீட்டு திருமணத்தில் பங்கேற்க பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட ராஜபாண்டி பங்கேற்றார். இதை அறிந்த மதுரை சிலைமான் இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் மடப்புரத்தில் அவரை கைது செய்து காரில் ஏற்றினர். அப்போது திருமண வீட்டார் காரை மறித்து ராஜபாண்டியை விடுவிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வேறு பாதையில் கைது செய்யப்பட்டவரை மதுரை போலீசார் காரில் அழைத்து சென்றனர்.
மேலும்
-
தடுப்பு அமைக்காமல் பாலப்பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
-
'மஞ்சப்பை விருது' விண்ணப்பிக்க அழைப்பு
-
எஸ்.ஐ.ஆர்., பணிக்கு ஒரே இடத்தில் விண்ணப்பம் வழங்குவதாக குற்றச்சாட்டு
-
சாலை விபத்தில் ஒரே வாரத்தில் 5 பேர் பலி போலீசார் நடவடிக்கை தேவை
-
குப்பை கொட்டுமிடமாக மாறும் நீர்நிலைகள்...நிதியில்லாமல் என்ன செய்றது?: அரசு மீது பழிபோட்டு தப்பிக்கும் மாநகராட்சி
-
லாரி மீது பைக் மோதி வாலிபர் பரிதாப பலி