ஓரினச்சேர்க்கை பிரச்னையில் சமையல்காரர் கொலை பாம்பனில் இருவர் கைது

ராமேஸ்வரம்: -: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் ஓரினச்சேர்க்கை பிரச்னையால் சமையல்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

பாம்பன் அன்னை நகரைச் சேர்ந்த சமையல்காரர் அன்சாரி 65. இவரை நவ., 21 இரவு இருவர் அடித்து கொலை செய்துவிட்டு தப்பினர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பாம்பன் அக்காள்மடம் சேர்ந்த பிரகாஷ்ராஜ் 37, பாம்பன் லைட் ஹவுஸ் தெரு சேர்ந்த சேவியர் 28, ஆகிய இருவரையும் பிடித்து பாம்பன் போலீசார் விசாரித்தனர்.

சம்பவத்தன்று அன்சாரி, இந்த இருவரிடமும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் இருவரும் ஆத்திரமடைந்து அன்சாரியை அடித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement