மேகமூட்டம்-சிறு துாறலால் கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'

கோபி:ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். விடுமுறை நாட்களில் எண்ணிக்கை கூடும்.


விடுமுறை தினமான நேற்று, கொடிவேரிக்கு குறைந்த சுற்றுலா பயணிகளே வந்தனர். காலை முதல் வானம் மேக மூட்டமாகவும், அவ்வப்போது சிறு துாறலும் போட்டதே இதற்கு காரணம். இதில் பலர் வெளியூர் ஐயப்ப பக்தர்கள் ஆவர். தடுப்பணை வழியாக சிறிய அளவில் கொட்டிய நீரில், குளித்து சென்றனர். இதனால் கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement