கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை
கடலுார்: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலுார் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறைகாற்று வீசக் கூடும்.
அதனால், கடலுக்குள் மீன் பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கரைக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.
மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது.
இத்தகவலை கடலுார் மீனவளத் துறை உதவி இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.