சவுக்கு சங்கர் சென்னையில் கைது
சென்னை: மிரட்டி பணம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
@1brபிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை யூடியூப் சேனல்களில் கூறி வந்தார். இதனால் அவர் மீது வெவ்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட அவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தடையுத்தரவு மற்றும் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவர், மீண்டும் தனது சவுக்கு மீடியா சேனலை நடத்தி வந்தார். இந்நிலையில், மனமகிழ் மன்றம் நடத்தும் ஹரிச்சந்திரன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர்.
'அவரது மனமகிழ் மன்றத்தை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி, தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தி விடுவேன்' என்று மிரட்டி ரூ.94 ஆயிரம் பறித்ததாக போலீசார் பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரை கைது செய்வதற்காக, இன்று காலை சென்னை மாநகர போலீஸ் படையினர் அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீசாரால் உடனடியாக கைது செய்ய முடியவில்லை. வீட்டினுள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீசார் வந்துள்ளதாக, வீடியோ வெளியிட்டார்.
வேறு வழியில்லாத நிலையில், வழக்கறிஞர்கள் வரும் வரை போலீசார் காத்திருந்தனர். வந்த வழக்கறிஞர்களுக்கும், போலீசாருக்கும் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில், தீயணைக்கும் படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். சவுக்கு சங்கரிடம் நடத்திய விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.
வாசகர் கருத்து (47)
Minimole P C - chennai,இந்தியா
14 டிச,2025 - 05:11 Report Abuse
These two Dravidian parties always misuse police force. MGR made TN as police state of India and KK, JJ misused police every possible way. People to think. 0
0
Reply
Venugopal S - ,
13 டிச,2025 - 23:02 Report Abuse
தமிழகத்தில் திமுக இதேபோல் அடுத்த ஐந்து வருடங்களும் புலம்ப வைத்து விடும்! 0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
13 டிச,2025 - 19:27 Report Abuse
இது என்ன அராஜகம்? ஒரு சாதாரண சிவில் வழக்குக்கு இவ்வளவு கொடூரமான முறையில் கைதா? த
இந்த பாசி ஆட்சிக்கு விரைவிலேயே ஒரு முடிவு கட்டப்படவேண்டும். 0
0
Reply
theruvasagan - ,
13 டிச,2025 - 19:23 Report Abuse
94000 கேட்டார் என்று உடனே கைது. ஆயிரம் கோடி ஊழல் முதலைகள் பற்றி ஆதாரம் தந்தும் நடவடிக்கை இல்லை. திராவிடமாடலின் சமூகநீதி. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13 டிச,2025 - 18:45 Report Abuse
தமிழ்நாட்டின் அதிகாரம் கையிலிருக்கும் வரை திமுக ஆட்டம் ஒயாது. 0
0
Reply
Ram - Chennai,இந்தியா
13 டிச,2025 - 18:42 Report Abuse
தோல்வி பயம் வந்துவிட்டது அதன் வெளிப்பாடுதான் 0
0
Reply
Prabu - Singampunari,இந்தியா
13 டிச,2025 - 17:58 Report Abuse
போலீஸ் அல்ல பொருக்கி 0
0
Reply
நாஞ்சில் நாடோடி - ,இந்தியா
13 டிச,2025 - 17:42 Report Abuse
திராவிட மாடலின் காட்டாட்சி ... 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
13 டிச,2025 - 17:40 Report Abuse
வாசன் என்கிற நல்வாசகர் மிகவும் அர்த்தமுள்ள ஒரு திட்ட தமிழ்வடிவமைப்பு எழுதியிருக்கிறார். நமக்கு நாமே ஆப்பு. ஆந்திர முன்னாள் முதல்வர் l ஜெகன் மோகன் ரெட்டியும் தேர்தலுக்குமுன் பல கைது நடவடிக்கைகளை நடத்தி நமக்கு நாமே ஆப்பு என்கிற திட்டத்தை செயல்படுத்தி இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. y 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
13 டிச,2025 - 17:36 Report Abuse
முத்தார் அஹமது இன்னும் கைது செய்யப்படவில்லை .ஆனால், வழக்கம் போல மீண்டும் ஒரு ஜர்னலிஸ்ட கைது செய்ய பட்டுள்ளார். கண்டிக்க தக்கது . 0
0
Reply
மேலும் 37 கருத்துக்கள்...
மேலும்
-
செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
-
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!
-
பாஜ எழுதி கொடுப்பதை அதிமுக அறிக்கையாக வெளியிடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசு; கருப்புக் கொடியேந்தி அண்ணாமலை குற்றச்சாட்டு
-
கடற்படையின் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா கப்பல் ஓமனுக்கு பயணம்; படங்களை வெளியிட்டு மோடி பெருமிதம்
-
முடிவை நோக்கி நகருகிறது உக்ரைன் போர்: டிரம்புடன் மீண்டும் பேசுகிறார் புடின்
Advertisement
Advertisement