சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெயரில் டிஜிட்டல் கைது: ரூ.3.71 கோடியை இழந்த பெண்!

7

மும்பை: டிஜிட்டல் கைது மோசடியில் 68 வயதான மும்பை பெண்ணிடமிருந்து ரூ.3.71 கோடியை பறித்த, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.



மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களது பெயர் பண மோசடியில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று அப்பெண் தெரிவித்தார்.


ஆனால் அப்பெண் மீதான வழக்கு ஆன்லைன் கோர்ட்டில் விசாரிக்கப்படும் என்று மர்மநபர் தெரிவித்து இருக்கிறார். ஆன்லைன் கோர்ட்டில் விசாரணையில் நீதிபதியாக இருந்த நபர் தன்னை நீதிபதி சந்திரசூட் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவரிடம் அப்பெண் தனக்கு பணமோசடியில் தொடர்பு கிடையாது என்று தெரிவித்தார்.


விசாரணையில் அப்பெண்ணிடம் இருந்த பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு ரூ.3.75 கோடியை அனுப்பி வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.


விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக அவர்கள் மேலும் கூறினார்.

Advertisement